ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேற காரணங்கள் என்ன..? அதிபர் ஜோ பைடன் விளக்கம்

0 2975

ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்கு, ஈராக்கில் அமெரிக்காவுக்காக போர் செய்து உயிர் நீத்த தமது மகனின் நினைவு கூட ஒரு காரணமாக இருக்கலாம் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பின்னர் முதன் முதலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பைடன், ஆப்கனில் இருந்து வெளியேறியது, அமெரிக்காவுக்கான சரியான, புத்திசாலித்தனமான, சிறந்த முடிவு என கூறினார்.

2001 ல் ஆப்கனை பிடித்த போது அமெரிக்காவுக்கு இருந்த  பாதுகாப்பு மற்றும் தீவிரவாத  அச்சுறுத்தல்கள் இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பல நாடுகளில் இருந்து பல்வேறு பயங்கரவாத அமைப்புகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதால், அமெரிக்க மக்கள் நலன் கருதி ஆப்கனில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

தாலிபன்களுடன் முன்னாள் அதிபர் டிரம்ப் செய்து கொண்ட ஒப்பந்த த்தின் படி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தாலிபன் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இப்போது தாலிபன்கள் நாட்டை பிடிக்க ஒரு காரணம் என பைடன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments