தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி - அமைச்சர் பொன்முடி

0 1937

தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 50 பேர் இருக்கும் வகுப்பில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பாடம் எடுக்கப்படுவதாக கூறினார்.

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 11ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments