உ.பி.யின் ஃபிரோசாபாத்தில் 10 நாட்களில் 45 குழந்தைகள் உயிரிழப்பு... டெங்கு காய்ச்சல் காரணமா ?

0 2192

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 10 நாட்களில் 45 குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்ததற்கு டெங்கு காய்ச்சல் காரணமா என சந்தேகிக்கப்படும் நிலையில், அது குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஃபிரோசாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் வரிசையாக கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  தற்போது 186 குழந்தைகள் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் பலருக்கு வைரல் காய்ச்சலும் சிலருக்கு டெங்குவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டதுடன், உயிரிழந்த குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments