ஆபாச வீடியோ வழக்கில் கைதான ராஜ்குந்த்ராவை விட்டு, பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு

0 3319

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய தனது கணவர் ராஜ்குந்த்ராவை விட்டு, நடிகை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விற்பனை செய்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற ஷில்பா ஷெட்டி முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ராஜ்குந்த்ரா தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க ஷில்பா ஷெட்டி விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments