அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் உடலை தொங்கவிட்டு ரோந்து சென்ற தாலிபன்கள்!

0 8099

அமெரிக்காவிட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்த ஆப்கன் நபரின் உடலை தொங்கவிட்டவாறு காந்தகார் நகரில் தாலிபன்கள் ரோந்து சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தங்களது விமானப்படை என தலைப்பு இட்டு இந்த காட்சியை தாலிபன்களின் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

காபூலில் தாங்கள் விட்டுவிட்டு வந்த ராணுவ விமானங்கள் மற்றும் தளவாடங்களை தாலிபான்களால் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்க முடியும், அவற்றை அவர்களால் இயக்க முடியாது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி முன்னதாக கூறியது இதன் மூலம் பொய்த்துப் போய் விட்டதை தாலிபன்கள் வெளியிட்ட வீடியோ காட்சி உறுதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

இதனிடையே, திகிலூட்டும் வகையில் இருக்கும் இந்த வீடியோ, ஆப்கன் விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனின் படுதோல்வியை உறுதி செய்வதாக ரிபப்ளிகன் செனட்டர் டெட் குரூஸ், டுவிட் செய்துள்ளார். அமெரிக்காவின் Blackhawk ஹெலிகாப்டரில் ஒரு மனித உடல் தொங்கும் காட்சி துயரமானதும், கற்பனைக்கு எட்டாததுமாகும் என அவர் விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments