வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு... கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.285 உயர்வு.!

0 2371
வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு... கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.285 உயர்வு.!

வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலையில் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் விலை 900 ரூபாயை எட்டியுள்ளது.

 வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்  வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து உயர்ந்து  900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. வணிக  பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்து  ஆயிரத்து 831 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் 285 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெட்ரோல் விலையில்  லிட்டருக்கு 12 காசுகள் குறைத்தும், டீசல் விலையில் 14 காசுகளை குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 99 ரூபாய் 08 காசுகளுக்கும்,  டீசல் லிட்டருக்கு 93 ரூபாய் 38 காசுகளுக்கும்  விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments