தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வருகை தந்து பாடம் கற்க்கும் மாணவ, மாணவிகள் ..!

0 3426

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் சீருடைகளை அணிந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டது.

அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் தலா 20 மாணவர்களை மட்டும் அமர வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோட்டில் சிவப்பு கம்பளம் விரித்தும், பூக்கள் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் மாணவர்களை வரவேற்றது.

பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகள், மேசை, நாற்காலிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யய்யப்பட்டது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழக அரசின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments