மேடான பகுதியில் ஏறமுடியாமல் தவித்த குட்டி யானை... தந்தத்தால் தூக்கிவிட்ட மற்றோர் யானை

0 2478

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் பள்ளத்தில் இருந்து மேடான பகுதிக்கு ஏற முடியாமல் தவித்த குட்டி யானைக்கு மற்றொரு யானை உதவி செய்தது.

மஸாட்டு வனப்பகுதியில் சில யானைகள் உலாவிக் கொண்டிருந்தன. பின்னர் அந்த யானைக்கூட்டம் வேறொரு பகுதிக்குச் செல்ல முயன்றபோது குறுகலான மேடான பகுதியைக் கடந்து செல்ல முயன்றன. அப்போது ஒவ்வொரு யானையாக முழங்காலிட்டு மேடான பகுதியில் ஏறின.

அந்தக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று சறுக்கலான பாதையில் ஏற முடியாமல் திணறியது. அதனைக் கண்ட பின்னால் வந்த யானை அதனை தனது தந்தங்களால் தூக்கி மேலேற உதவி செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments