காதலை கைவிட்ட காதலியை விரட்டிச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்

0 5543

காதலை கைவிட்ட காதலியை நடு சாலையில் மறித்த காதலன், கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த சந்தோஷ் குலால், மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சவுமியாவுக்கு, வீட்டில் வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்துக்கு சவுமியாவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சவுமியாவிடம் இதுபற்றி சந்தோஷ் கேட்டதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சவுமியா தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததால், தன்னைக் காதலித்து கழற்றி விட்டதாக சந்தோஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், சந்தேகட்டே பகுதியில் வைத்து சவுமியாவின் ஸ்கூட்டரை மறித்துள்ளார்.

தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன் ?என்று சந்தோஷ் கேட்டதால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சவுமியாவை சரமாரியாக குத்தி உள்ளான்.

இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த சவுமியா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் சந்தோசும், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடுரோட்டில் நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அவர்களது பைகளில் இருந்த ஆவணங்களை வைத்து இருவரையும் அவர்கள் யார் ? என்று அடையாளம் கண்டனர்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணிபால் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுமியாவும், சந்தோசும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழியில் விழுந்து இதயம் நுழையும் காதல் விருப்பமின்றி விலகிச்சென்றால் விட்டுவிட வேண்டும், அதை விடுத்து கத்தியால் குத்தி உயிரை மாய்ப்பதால் இருவரின் வாழ்க்கையும் சீரழிந்து விடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments