நாடு முழுவதும் ஒரே நாளில் 1.25 கோடிப் பேருக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 1359
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.25 கோடிப் பேருக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 5 நாட்களில் இது இரண்டாவது முறையாக அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறையின் அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடுத்துள்ள ட்விட்டர் குறிப்பில், முன்களப் பணியாளர்களின் கடின உழைப்பையும், பொதுமக்களின் விடா முயற்சியையும் பாராட்டியுள்ளார்.

இதுவரை இந்தியா முழுவதும் 65 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments