தமிழ்நாட்டில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

0 2352
தமிழ்நாட்டில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கலை-அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இன்று முதல் இயங்குகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் செயல்படத் தொடங்கின.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்பட 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.

முன்னதாக கல்வி நிலையங்கள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் போதிய இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் நோய்த்தொற்று பரவி வருவதால் அங்கிருந்து கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments