ஹேப்பி பெர்த் டே கொண்டாட வசூல்..! சிறுத்தை அட்டகாசம்..! பெட்ரோல் பங்கில் அடிதடி..!

0 27803
ஹேப்பி பெர்த் டே கொண்டாட வசூல்..! சிறுத்தை அட்டகாசம்..! பெட்ரோல் பங்கில் அடிதடி..!

திண்டிவனம் அருகே  பிறந்தநாள் கொண்டாட  நன்கொடை தராததால் பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய வி.சி.க தொண்டரணி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு, சின்ன வளவனூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.

கடந்த 28ஆம் தேதி மகேஷ் கூட்டேரிப்பட்டு பகுதியில் திறக்கப்பட்ட பாரத் பெட்ரோல் பங்கிற்குச் சென்று அங்கு பணியில் இருந்த மேலாளர் ரவி சங்கரிடம் தங்கள் கட்சி தலைவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட நன்கொடை வழங்குமாறு கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்ததால் மேலாளர் ரவிசங்கரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு, அங்கிருந்து சென்ற மகேஷ் மீண்டும் 29ம் தேதி பெட்ரோல் பங்கிற்கு சென்று வம்பிழுத்ததாக கூறப்படுகின்றது.

அங்கு நின்றிருந்த ரவி சங்கரிடம் பணம் கேட்டால் தர மாட்டீர்களா? எனக் கேட்டு கன்னத்தில் அறைந்து அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து அவரை தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதல் காட்சிகள் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது

இந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு மயிலம் காவல் நிலையத்தில் மேலாளர் ரவிசங்கர் புகார் அளித்தார். இதையடுத்து வி.சி.க நிர்வாகி மகேஷ் மீது மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments