64 கல்குவாரிகளை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3366
64 கல்குவாரிகளை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உரிமம் இல்லாத கல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்த வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

ஆய்வில், அங்கு 64 குவாரிகள் உரிமம் இல்லாமல் செயல்படுவதும், 18 குவாரிகள் நிபந்தனைகளை மீறி செயல்படுவதும் தெரியவந்தது. அறிக்கையப் படித்த நீதிபதி, குவாரிகளை அவ்வப்போதைக்கு ஆய்வு செய்யாததால் நிர்வாகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, உரிமம் இல்லாமல் செயல்படும் 64 குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

குவாரிகளை செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments