''வலிமை'' என்ற புதிய வணிக பெயருடன் அரசு சிமெண்ட்

0 2251
''வலிமை'' என்ற புதிய வணிக பெயருடன் அரசு சிமெண்ட் வெளிச்சந்தையில் அறிமுகம்

அரசு சிமெண்ட் "வலிமை'' என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மொத்தமாக 13.86லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் turn over தோராயமாக 705 கோடியாக இருக்கும் எனவும், லாபம் மட்டும் 53கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் 5,23,448 மெ.டன் சிமெண்ட் உற்பத்தி செய்து, 5 லட்சத்து 26 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments