தஞ்சை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

0 1935

தஞ்சை அருகே வயல் பகுதியில் தனியாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்த நபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டான்.

செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. தினசரி தனது தந்தையுடன் வயல்வெளிக்கு மாடு மேய்க்கச் செல்பவர் நேற்று தனியாக மாடு மேய்க்கச் சென்றுள்ளார்.

இதனைக் கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவன், சிறுமியை பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தான் என்று கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments