திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் யானைகள் பிளிறியதால் பக்தர்கள் அச்சம்...!

0 2096
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் யானைகள் பிளிறியதால் பக்தர்கள் அச்சம்...!

கோகுலாஷ்டமியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவநீத சேவை திட்ட தொடக்க விழா ஊர்வலத்தின் போது, கோயில் யானைகள் திடீரென அதிக சத்தத்துடன் பிளிறியதால், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

யானைகளை சங்கிலியால் கட்டி கட்டுக்குள் கொண்டுவர முயன்றும் முடியாததால், பாகன்கள் மீண்டும் யானைகளை கோசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இவ்வாறு யானைகள் பிளிறுவது மிகவும் அரிதானது என்று பாகன்கள் தெரிவித்தனர்.

நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் கடைந்தெடுத்த வெண்ணையை கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்து செல்லும் நவநீத சேவை நிகழ்ச்சியில் கோவில் யானைகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments