சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் ஓய்வு

0 3054
தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டெய்ன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். 38 வயதாகும் டேல் ஸ்டெய்ன், 2004 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக தோல்பட்டை காயத்தால் அவதியுற்று வந்த ஸ்டெய்ன் 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வந்த அவர்தான் அதிகம் நேசிக்கும் கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

93 டெஸ்ட், 125 ஒரு நாள் மற்றும் 47 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள டேல் ஸ்டெய்ன் மொத்தம் 699 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments