கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - சம்பவத்தில் தொடர்புடைய 6வது நபர் கைது

0 3037
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

கர்நாடக மாநிலம் மைசூரில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6வது நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 24ஆம் தேதி இரவு மைசூரு சாமுண்டிகோவில் பகுதியில் தனியாக வந்த காதல் ஜோடியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய ஒரு கும்பல், பணம் இல்லை என்றதும் கல்லூரி மாணவியான அந்தப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 6வது நபராக சேவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஏற்கனவே கைதான 5 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று கர்நாடக போலீசார் விசாரணை செய்தனர். ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசும் காதல் ஜோடி, கணவன்-மனைவி என யாராக இருந்தாலும் அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் பெண்களை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதையும் இந்த கும்பல் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments