மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதி தப்பியோட்டம் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

0 1715
மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஜன்னல் கம்பியை அறுத்து தப்பியோடிய வெளிநாட்டு கைதியை போலீசார் தேடி வருகின்றனர். அங்கு உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடு தப்பிச்செல்ல முயலுதல், கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளில், பல்கேரியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் என்ற கைதி தங்கியிருந்த அறையின் ஜன்னல் கம்பியை அறுத்து தப்பி சென்றதாக தெரிவித்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments