மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை - தமிழக அரசு

0 5955
மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை - தமிழக அரசு

மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதோடு, ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையே கற்றலில் வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு வருமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்ற அரசு தரப்பு வாதத்தை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments