சென்னை அரும்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

0 1792
சென்னை அரும்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

சென்னை அரும்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. முகப்பேரை சேர்ந்த சில்வியா என்பவர், துரைப்பாக்தில் உள்ள தனது மகளை பார்க்க காரில் சென்றுகொண்டிருந்தார்.

வடபழனி 100 அடி சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வெளியேறியதை அறிந்த சில்வியா, காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

அதன்பின், காரில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments