’தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாவதில் சிக்கல்?

0 3338

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி 2 வாரத்தில், தலைவி படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் படத்தை ஓடிடியில் வெளியிட குறைந்தது 4 வார இடைவெளி தேவை என திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இருத்தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், பேச்சுவார்த்தை முடிவிற்கு பிறகே திட்டமிட்டபடி தலைவி படம் வெளியாகுமா என்பது தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments