பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட அரசுப் பேருந்து

0 3180

தெலுங்கானாவில், அரசுப் பேருந்து ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்த 25 பயணிகள் மீட்கப்பட்டனர்.

ராஜண்ண சிறிசில்லா மாவட்டம், கம்பீரவுப்பேட்டை - லிங்கண்ணப்பேட்டை இடையே அம்மாநில அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று மாலை பேருந்து மன்னேறு ஆற்று கால்வாய் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ளத்தில் சிக்கியது.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பேருந்தில் இருந்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் 25 பயணிகளை, ஜேசிபி உதவியுடன் மீட்டனர்.

மேலும், வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை வெளியே இழுக்கும் முயற்சி தோல்வியடைந்தால், நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments