ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 2816

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி  தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணி முடிந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் வெளியிட்டார்.

வேலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு  தயாரிக்கப்பட்ட இந்த  வாக்காளர் பட்டியல், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments