முறையற்ற உறவை கண்டித்ததால் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இளைஞருடன் கைது

0 2871

புதுச்சேரி அருகே அப்பள வியாபாரியை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, நாடகமாடிய மனைவி இளைஞருடன் கைது செய்யப்பட்டார்.

அரசூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், கடந்த 28ஆம் தேதி தூங்கி கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் சந்திரசேகர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி தவமணியை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில், கறிக்கடையில் வேலை செய்து வந்த அஜ்மீர்கான் என்ற இளைஞருடன் தவமணிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை சந்திரசேகர் வீட்டின் மேல் தளத்தில் தவமணி வாடகைக்கு தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடையே இருந்த முறையற்ற உறவை அறிந்த சந்திரசேகர், மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் இதனால் கோபமடைந்த தவமணி, அஜ்மீர்கானுடன் இணைந்து தூங்கி கொண்டிருந்த சந்திரசேகரின் கழுத்தை நெரித்தும் தலையணை கொண்டு அழுத்தியும் கொலை செய்துவிட்டு பின் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது.

திண்டுக்கலில் பதுங்கி இருந்த அஜ்மீர்கானையும் கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பெற்றோர் இன்றி 2 பெண் குழந்தைகள் நிற்கதியாக தவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments