விரைவில் இந்தியாவில் டெஸ்லாவின் மின்சார கார்கள்..?

0 3933

 டெஸ்லா மின்சார கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்லா தனது மின்சார கார்களின் 4 மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்து விற்கவோ மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. டெஸ்லாவின் கார்கள் இந்திய சாலைகளில் ஓடுவதற்கான மாசுக்கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாடல்-3, மாடல் Y கார்கள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் வருடாந்திர கார் விற்பனையில் சுமார் ஒரு சதவிகிதம் மட்டுமே மின்சார கார்களாக உள்ளன. மின்சார கார்களுக்கான மின் சார்ஜ் வசதிகள், கடனுதவிகள் ஆகியனவும் சொற்பமாகவே உள்ளதால் இந்தியா மின்கார் விற்பனையில் பின்தங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments