புதுச்சேரி சபாநாயகர் ஆர்.செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி

0 1652

புதுச்சேரி சபாநாயகர் ஆர்.செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 4ஆம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் ஆர்.செல்வம் வந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையறிந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனை சென்று சபாநாயகர் செல்வத்தின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments