கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா... தண்டனையை கடுமையாக்க சட்டம்: முதலமைச்சர் உறுதி

0 2709
கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா... தண்டனையை கடுமையாக்க சட்டம்: முதலமைச்சர் உறுதி

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு, பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 10ஆயிரத்து673 பேர் மீது வழக்குகள் பதிந்து, 149 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையாக தண்டனைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, திமுக எம்.எல்.ஏ. மகன் கருணாசாகர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து வாடும் திமுக எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments