வீடு புகுந்து திருடியவர் கைது - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

0 1659

திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையத்தில் வீடு புகுந்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தீரன் சின்னமலை நகரை சேர்ந்த ராமசாமியின் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் சாவியை கொடுத்துவிட்டு அடிக்கடி வெளியே செல்வதால், அவர்கள் மீது சந்தேகப்பட்ட ராமசாமி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்து விட்டு, சிசிடிவியையும் வைத்துள்ளார்.

ராமசாமி வெளியே சென்றதும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவுரீஸ்வரன், கதவை திறந்து மேஜை சாவியை எடுத்து பணத்தை திருடி உள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ராமசாமி, போலீசில் புகாரளித்துள்ளார். கவுரீஸ்வரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments