பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கம்.!

0 3170

டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கை முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கையின் தினேஷ் ஹெரத் முடியன்சலேகே  F46 பிரிவில் 67 புள்ளி 79 மீட்டர் தூரம் வீசி உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

நீச்சல் போட்டியில் சீனா 4 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்  பிரிவில் சீன வீரர் Zheng Tao, மற்றும் வீராங்கனை Lu Dong முறையே தங்கம் வென்றனர். அதேபோல் 50 மீட்டர் பட்டர்பிளை  பிரிவில் ஆடவரில் சீனாவின் Wang Jingang-ம், மகளிரில் Jian Yuyan-ம் தங்கம் வென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments