உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 33 குழந்தைகள் உயிரிழப்பு

0 2201

உத்தரப்பிரதேசத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு 33 குழந்தைகளும், 7 பெரியவர்களும் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ஃபிரோஸாபாத் மற்றும் மெயின்புரி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வார்டுகள் தற்போது மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதே மருத்துவமனையில் கிட்டத்தட்ட 30 குழந்தைகள் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments