போக்குவரத்துக் காவலரை கன்னத்தில் அறைந்த வெளிமாநில லாரி ஓட்டுநர்

0 7211
போக்குவரத்துக் காவலரை கன்னத்தில் அறைந்த வெளிமாநில லாரி ஓட்டுநர்

சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்து ஓட்டுனர் முஸ்தாக் அகமது என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், போக்குவரத்து காவலரை அறைந்துள்ளார்.

தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி ஓட்டுநர் முஸ்தாக் அகமது காவலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முஸ்தாக் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments