திருநங்கையாக மாறிய தம்பி ..! அவமானமாக கருதி தம்பியை கொன்ற அண்ணன்..!

0 3158
திருநங்கையாக மாறிய தம்பி ..! அவமானமாக கருதி தம்பியை கொன்ற அண்ணன்..!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே திருநங்கை போல உடல் மாற்றம் அடைந்து வந்ததாகக் கூறப்படும் சிறுவனை அவனது அண்ணனே கத்தியால் குத்திக் கொன்ற சோகம் அரங்கேறி உள்ளது.

துட்டம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜுவும் 17 வயதான அவரது தம்பியும் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்துள்ளனர். சிறுவனின் உடலில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கைகளுக்கு உண்டான பாவனையுடன் பெண் போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத செல்வராஜ், அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படி கூறி தம்பியை கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன் திடீரென வீட்டை விட்டு மாயமான சிறுவன், ஒரு மாத காலம் செங்கல்பட்டில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அவனது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறுவன் மீண்டும் செங்கல்பட்டு செல்லப்போவதாக செல்வராஜிடம் கூறியுள்ளான்.

அங்கு சென்றால் முழுமையாக நீ திருநங்கையாக மாறிவிடுவாய் எனக் கூறி செல்வராஜ் அவனுடன் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தம்பியை செல்வராஜ் சரமாரியாகக் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments