டோக்கியோ பாராலிம்பிக் போட்டி - வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

0 3135
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி - வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வென்ற வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

41 வயதாகும் வினோத் குமார் ஆடவருக்கான எப் 52 பிரிவு வட்டு எறிதல் பிரிவில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

எப் 52 பிரிவில் தசைபலம் குறைவு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்பதால் அவரது வெற்றி முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் எப்52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதியற்றவர் என தொழில் நுட்ப குழுவினர் முடிவு செய்ததால் அவரது வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments