ஆந்திராவில் நிலத்தகராறில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் இராணுவ வீரர்

0 1587
ஆந்திராவில் நிலத்தகராறில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் இராணுவ வீரர்

ஆந்திராவில் நிலத்தகராறில் உறவினர் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.

குண்டூர் மாவட்டம் ராயவரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாம்பசிவ ராவ் என்பவருக்கும் அவரது உறவினர்கள் 3 பேருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று மாலை பேச்சுவார்த்தைக்காக 3 பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார் சாம்பசிவ ராவ். அப்போது உறவினருக்கும் சாம்பசிவ ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் மோதலாக மாறியதால், ஆத்திரமடைந்த சாம்பசிவ ராவ், தன்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்து மூவரையும் நோக்கி 8 சுற்றுகள் சுட்டார் என்று கூறப்படும் நிலையில், 3 பேரும் படுகாயமடைந்தனர்.அவர்களில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments