குட் - டச், பேட் - டச் - காவலாளியை காட்டி கொடுத்த சிறுமி

0 2908
குட் - டச், பேட் - டச் - காவலாளியை காட்டி கொடுத்த சிறுமி

குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர் சொல்லிக் கொடுத்ததன் பலனாக, சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டான்.

சிறுமியின் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருந்து வந்த வேப்பேரியைச் சேர்ந்த மோகன், கடந்த ஒரு மாத காலமாக சிறுமியின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் மோகன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் காவலாளி மோகன் பேட் டச் செய்ததாக சிறுமி கூறவே, அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வேப்பேரி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

குட்-டச், பேட் - டச் குறித்து சொல்லிக் கொடுத்ததால் தான் சிறுமி தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலை உணர்ந்து உடனடியாக பெற்றோரிடம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments