டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது தங்கம்

0 3180
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது தங்கம்

ஏற்கெனவே ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில், வெள்ளி, வெண்கலம் என இந்தியா 2 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், எஃப்-64 ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார்.

போட்டியில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அவர் உலக சாதனையும் படைத்துள்ளார். இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளது.

சுமித் அண்டிலின் உலக சாதனை மூலம் தேசம் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, நமது வீரர், வீராங்கனைகள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து ஜொலிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments