உன் சாவு என் கையில் தான் ; என்ஐஏ விசாரணை கைதி காஜாமொய்தீன் சிறை கண்காணிப்பாளருக்கு மிரட்டல்

0 4597
என்ஐஏ விசாரணை கைதி காஜாமொய்தீன் சிறை கண்காணிப்பாளருக்கு மிரட்டல்

சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில், அல் உம்மா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறப்படும், என்ஐஏ விசாரணை கைதியான காஜாமொய்தீன், சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஜாமொய்தீன் தனக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறி வெந்நீர் பயன்படுத்த பிளாஸ்க் கேட்டதாகவும், வெந்நீர் தர ஏற்பாடு செய்வதாக கூறிய சிறை கண்காணிப்பாளர் முத்துராமன்,பிளாஸ்க் வழங்குவது குறித்து உயரதிதிகாரிகளிடம் அனுமதி கேட்டு தகவல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை கூட மேலதிகாரியிடம் கேட்கவேண்டுமா?, நீ எதற்கு சிறையில் தலைமை பொறுப்பில் இருக்கிறாய்? என என காஜாமொய்தீன் ஒருமையில் பேசியதோடு, கேட்கும் பொருட்களை தராவிட்டால் நடப்பதே வேறு என, ஜன்னல் கதவை கையினால் ஓங்கி அடித்து "உன் சாவு என் கையில் தான்" என மிரட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments