கொடூர பெண்ணுக்கு மனநல பாதிப்பு இல்லை..! கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு..!

0 14829
கொடூர பெண்ணுக்கு மனநல பாதிப்பு இல்லை..! கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்த பெண்ணை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2ஆவது குழந்தை  அவரது கணவரின் சாயலில் இருந்ததால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் குழந்தையை தாக்கி வீடியோ எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பி வந்ததாக அந்த கொடூரப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகனின் மனைவி துளசி, தான் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்ததால், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார், ஆந்திராவுக்கு சென்று துளசியை கைது செய்தனர். ஆந்திராவில் கைது செய்யப்பட்ட துளசியை சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், செஞ்சி அரசு மருத்துவமனையில் துளசிக்கு மருத்துவ பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

அதற்கு பிறகு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மன நல பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில், துளசிக்கு எந்த மன நல பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவர் பாரதி சான்று அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மற்றொரு இளைஞன் உடனான தவறான உறவின் காரணமாக கணவனுடன் வாழ பிடிக்காமல் துளசி, குழந்தையை தாக்கி வீடியோ எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்த போது பிரேம்குமார் என்பவனுடன் துளசிக்கு பழக்கம் ஏற்படவே, ஊருக்குச் சென்ற பின்பும் செல்போன் மூலம் தனது கள்ளக்காதலை வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் குழந்தையை துளசி தாக்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மூத்த மகன் தன் சாயலில் இருப்பதால் அவனை விட்டுவிட்டதாகவும், 2ஆவது மகன் கணவர் வடிவழகன் சாயலில் இருந்ததால் குடும்ப பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் பிரதீப்பை தாக்கி வீடியோ எடுத்து, கள்ளக்காதலன் பிரேம்குமாருக்கு அனுப்பும் கொடூரச் செயலிலும் துளசி ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் பிரேம்குமாரை 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மருத்துவம் மற்றும் மனநல பரிசோதனைக்குப் பிறகு செஞ்சி நீதிமன்றத்தில் துளசி ஆஜர்படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனை அறிக்கையும், துளசிக்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர் வழங்கிய சான்றிதழும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, துளசியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கடலூரிலுள்ள மத்திய பெண்கள் கிளை சிறைக்கு துளசி கொண்டு செல்லப்பட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments