தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை திட்டமிட்டபடி திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

0 14498
தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகளை திட்டமிட்டபடி திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளை திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கலாமா என முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போதுள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளவில் இருந்து தமிழகத்தில் உள்ள எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாமா என சுகாதாரத் துறை பரிந்துரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments