கோவையில் கதவை திறந்து வைத்து தூங்குபவர்கள் வீட்டை குறிவைத்து திருட்டு… சகோதர-சகோதரிகள் 4 பேர் கைது

0 7285

கோவையில் கதவை திறந்து வைத்து தூங்குபவர்கள் வீட்டை குறிவைத்து செல்போன் திருடிவந்த, சகோதர-சகோதரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், குனியமுத்தூரில், வீடுகளில் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்ந்து திருடு போவதாக வந்த புகாரை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, வீடுகளில் ஆட்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சந்தடியின்றி 2 பெண்கள் வீடுபுகுந்து செல்போன்களை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

அந்த 2 பெண்களையும், அவர்களது சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சௌரியம்மாள் இருவரும் கதவு திறந்திருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு, செல்போன் திருடி வந்ததும், ரமேஷ், அந்து ஆகிய இருவரும் அவற்றை விற்று காசு பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பகல் நேரத்திலும் கூட, கதவுகளை திறந்து வைத்து விட்டு தூங்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments