தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை

0 1843
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் மிதமான மழை பெய்யக்கூடும்.

2,3 ஆகிய தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கேரள மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments