காருக்குள் உயிரிழந்து கிடந்த அதிமுக நிர்வாகி... மாரடைப்பால் உயிரிழந்தாரா? வேறு ஏதேனும் காரணமா?

0 3129

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் பேருந்து நிலையத்தில் காருக்குள் உயிரிழந்து கிடந்த அதிமுக நிர்வாகியின் உடலை கைப்பற்றி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டார் பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக நின்றிருந்த காரின் ஓட்டுனர் இருக்கையில், ஒருவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததால், அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.விசாரணையில், உயிரிழந்த அந்த நபர், திருவட்டாரை அடுத்த முதலார் புல்லாணிவிளையை சேர்ந்த குமரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி இணை செயலாளர் பென்சாம் என்பது தெரியவந்தது.

அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments