பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 7695
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், கல்லுரிகள், பள்ளிகளில் எடுக்கப்படுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து விரிவான ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வரக்கூடிய  நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றியும், தமிழகத்தில் பாதிப்பை மேலும் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments