4 வயது முதல் 17 வயதுடைய சிறுமிகளிடம் சில்மிஷம்… கயவனைக் கைது செய்த போலீசார்.!

0 2849

சென்னையில் 4 வயது முதல் 17 வயது சிறுமி வரையிலான சிறுமிகளிடம் அன்பாகப் பழகுவது போல் பழகி, பாலியல் துன்புறுத்தல் செய்த நபரையும் அவனுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் கைதான பெண்களில் ஒருவரது மகள் என்பதும் தாயின் ஒப்புதலோடு இந்தக் கொடுமை அரங்கேறி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் குளிர்பானக் கடை நடத்தி வரும் 48 வயதான பெருமாள் என்பவனது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.  பெருமாளை கைது செய்து, குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவனுக்கு குட்கா சப்ளை செய்யும் நபர் யார் என்பது குறித்து தெரிந்துகொள்ள, செல்போனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சிறுமிகள் பலரிடம் பெருமாள் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதுகுறித்து விசாரணையில் இறங்கியபோது, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரிடம் பெருமாள் தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்தது. சகோதரிகளில் ஒருவரது 9 வயது மகளிடமும் பெருமாள் அத்து மீறி இருக்கிறான். முதலில் எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய், பெருமாளுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள முடியாமல், கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அத்தோடு நிற்காத அந்தக் காமுகன், சிறுமியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்து செல்லும் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 4 வயது சிறுமிகள் முதல் 17 வயது வரையிலான சிறுமிகளிடமும் தன்னுடைய பாலியல் சீண்டலை தொடர்ந்து இருக்கிறான் என்கின்றனர் போலீசார். சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதை விடியோவாகவும் எடுத்து வைப்பதை வழக்கமாக்கி இருந்த பெருமாளை அந்த வீடியோக்கள்தான் தற்போது போலீசில் சிக்க வைத்துள்ளன.

சிறுமிகளிடம் அன்பாகப் பழகுவதுபோல் பாவனை செய்து அவர்களிடம் அத்து மீறுவது பெருமாளின் வாடிக்கை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெருமாளையும் அவனின் இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments