காரைக்குடி அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5.20 கோடி பறிமுதல்

0 18918

காரைக்குடி அருகே காரில் கொண்டு வரப்பட்ட 5 கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை,  போலீசார் உதவியோடு பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை - தேவகோட்டை  நெடுஞ்சாலையில் குன்றக்குடியில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சேலம் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது, ஒரு காரில் 5 கோடியே  20 லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து காரில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் ரெடிமிக்ஸ் கான்கீரிட் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்க வந்திருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments