17 வயது மாணவனை மணமகனாக்கிய 19 மீது பாய்ந்தது போக்சோ..!

0 5091
17 வயது மாணவனை மணமகனாக்கிய 19 மீது பாய்ந்தது போக்சோ..!

பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் 17 வயது மாணவனை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச்சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது இளம் பெண் யமுனா என்பவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்தார். அவரது பங்கிற்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் அடிக்கடி பெட்ரோல் போட சென்றுள்ளான்.

கண்டதும் காதல் என்பது போல 17 வயது சிறுவனை தனது விழிஅசைவால் கட்டி இழுத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் யமுனா. இந்த நிலையில் மாணவன் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அந்த மாணவனை உடனிருந்து யமுனா கவனித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் யமுனா மீது அந்த மாணவனுக்கும் அளவுகடந்த அன்பு பிறந்துள்ளது.

இதனை பயன்படுத்திக் கொண்ட யமுனா, அந்த மாணவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவனை பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து நம்மை பெற்றோர் பிரிக்காமல் இருக்க வேண்டுமானால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி, அந்த மாணவனை தனது கழுத்தில் தாலிகட்ட வைத்ததாகவும், பின்னர் அந்த சிறுவனுடன் கோவைக்கு சென்று தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்திவந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே தங்கள் மகனை காணாமல் தவித்த அவரது பெற்றொர் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த பெண்ணின் செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து கோவைக்கு சென்று இருவரையும் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில, தனது காதலி யமுனா கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்துச்சென்று , அங்கு வைத்து தனது கையில் தாலியை கொடுத்து கட்டாயப்படுத்தி தாலி கட்டவைத்ததாகவும், பாலியல் ரீதியாக தன்னிடம் அத்துமீறியதாகவும் 17 வயதேயான அந்த மாணவன் போலீசில் தெரிவித்ததால், யமுனாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் சிறுவனை கடத்திச்சென்று கட்டாயதிருமணம் செய்ததாக ஒரு பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்தார். ((spl gfx out)) அதே நேரத்தில் சமூகத்தில் இன்னும் பெண் கிடைக்காமல் முதிர் காளையர்களாய் பலர் சுற்றும் நிலையில் அவர்களை விடுத்து பள்ளிச்செல்லும் 2கே கிட்டான சிறுவனை மணம் முடிந்த விபரீத செயலால், சிறை பறவையாகி கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் யமுனா என்கின்றனர் காவல்துறையினர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments