காபூல் விமான நிலையத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் மீது டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் - 6 தீவிரவாதிகள் பலி?

0 3199

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தைத் தகர்க்க வெடிகுண்டுகளை நிரப்பி வந்துக் கொண்டிருந்த ஐ.எஸ்.கே தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் கார் மீது அமெரிக்காவின் டிரோன் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இதில் கார் வெடித்துச் சிதறி 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால் காபூல் விமான நிலையத்தைத் தாக்க தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இறுதியல்ல என்றும், ஐ.எஸ்.-கே மீது மேலும் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments