இந்தியாவுடன் அரசியல், வர்த்தக உறவை தொடர விருப்பம் - தாலிபன் மூத்த தலைவர் ஷேர் முகம்மது அப்பாஸ் அறிவிப்பு

0 5527
இந்தியாவுடன் அரசியல், வர்த்தக உறவை தொடர விருப்பம் - தாலிபன் மூத்த தலைவர் ஷேர் முகம்மது அப்பாஸ் அறிவிப்பு

 இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தாலிபன் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டேன்கசாய் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களின் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் இதை தெரிவித்த அவர், இந்தியா இந்த துணைக்கண்டத்தில் மிக முக்கியமான நாடு என கூறியுள்ளார்.

இந்தியாவுடனான வான்வழி வர்த்தகத்திற்கான வழிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக மூத்த தாலிபன் தலைவர் ஒருவர் இந்தியாவின் முக்கியத்துவத்தை பற்றி வெளிப்படையாக வரவேற்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments