கோவை : 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம்பெண் போக்சோவில் கைது

0 5957

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக 19 வயது இளம்பெண், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண்ணுக்கும், அங்கு வாடிக்கையாக பெட்ரோல் நிரப்ப வரும் 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் குடலிறக்க நோய்க்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருந்த அந்தப் பெண்ணை, அவ்வப்போது சென்று சிறுவன் கவனித்துக் கொண்டான் என்றும் கூறப்படும் நிலையில், அவன் மீது இளம்பெண் காதலில் விழுந்துள்ளார்.

வயது வித்தியாசம் இருப்பதால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி சிறுவனை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று இளம் பெண் திருமணம் செய்துகொண்டார் என்று கூறும் போலீசார், அப்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments